பகுதி 8 நமக்கு நாமே . நிழல் : அந்த குரலிடம் பேசாதே . நான் : தாயத்தை இருக்கி கையில் பிடித்துக்கொண்டு உறக்கத்தில் இருந்தபடியே பேசினேன். நீ யாரு , நீ தானே அந்தக்குரல் . . நிழல் : இல்லை இல்லை.நான் உன்னுடைய நிழல் தான். பேரமணர் மலையிலேயே நான் உன்னைப் பிரிந்துவிட்டேன். நான் : என்ன சொல்கிறாய் ...! என் நிழல் என்னுடன் தான் இருக்கிறது . மாலை நான் தெருவிளக்கின் அருகே விளையாடும் பொழுது இருந்ததே... நிழல் : இல்லை, இயற்கை வெளிச்சத்தில் அதாவது சூரிய ஓளியில் அது அமைதியாகவும் நிலவொளியில் அது ஆக்ரோஷமாக இருக்கும். நான் உன்னை விட்டு வந்து வெகுநாள் ஆகிவிட்டது. பௌர்னமி அன்று மட்டும் தான் நான் நம்முள் வர வாய்ப்பு கிடைக்கும். ஆனால் கடைசி இரண்டு பௌர்னமி நம்மை சேரவிடாமல் தடுத்து விட்டது. நான் : எப்படி? நிழல் : பௌர்னமி அன்று அந்த உருவமில்லா நிழல் உன் முன் தோன்றி , பயம் காட்டி உன்னை தூங்க விடாமல் செய்துவிடும். இன்றோ நீ தாயத்து இருக்கும் தைரியமோ தெரியவில்லை நீ தூங்கிவிட்டாய்.நானும் வந்துவிட்டேன். நாம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். இனி நமக்கு நாமே தான் பாதுகாப்பு. நான் : அது சரி , ந...