Skip to main content

உருவமில்லா_நிழல் VI

பகுதி6

சொர்க்கம்


சித்தர் ஒரு பக்கம் இருக்க . பள்ளியில் படிப்பது கொஞ்சம் மீதி நேரம் 
மயில் இரகை குட்டி போடுவது, 
பட்டாசு செடி எச்சை தொட்டு வெடிப்பது,
பென்சில் குப்பையில் ரப்பர் செய்வது, 
ஜீபூம்பா பென்சில் , 
ரேடியம் பாலை பையில் வைத்து பார்ப்பது, 
சக்திமான் , மாயா மச்சிந்திரா மற்றும் கார்டுன் நெட்வ்னர்க் (இது மட்டும் இப்பொழுது வரை பார்ப்பேன்.)
என பல இருந்தது ஐந்தாம் வகுப்பு வரை.

ஆறாம் வகுப்பிலிருந்து தான் 
Parle-G shaktiman sticker பீரோவில் , பரிட்சை அட்டையிலும் இருக்கும்,
கீழ் உள்ள கரம் போட்டு விளையாடுவது 

ஏரோப்ளேன்
ஐஸ்பாய்
WWE cards .... ,
Gems மிட்டாய்க்கு WWE sticker.

எட்டாம் வகுப்பின் போது
பாட்டுபுத்தகம் ,
பென்ஃபைட் ,
 புக் கிரிக்கெட்,
ஹேன்ட் கிரிக்கெட் மற்றும் பல...
சொர்க்கத்தில் இருந்த நாட்கள்.

இவை அனைத்தும் என் மனதில் இருக்கும் அந்த  பயத்தை கொஞ்சம் ஆசுவாசப்படுத்தியது.

சொர்க்கத்திலிருந்து வெளிய வந்தநாள் எட்டாம் வகுப்பு முழு ஆண்டு விடுமுறையில் , எனது ஆயா ஊருக்கு சென்றிருந்தேன். பூங்காடு அருகில் கடையூர் என்ற கிராமம். எனது தாத்தா அவர் வயலுக்கு குப்பையை (இயற்க்கை உரம் )எடுக்க மாட்டு வண்டியில் அதிகாலை ஐந்து மணிக்கு சென்றார் நானும் அவருடன் சென்றேன். நான் செய்த பெரிய தவறு அதுதான். குப்பையை எடுக்க ஏரியை கடந்து தான் போகனும், அங்கே தான் இடுகாடு உள்ளது. இடுகாடு ஒட்டி ஒரு ஐம்பது அடியில்தான்  பேரமணர் மலை பின்புறம் . எனது தாத்தா குப்பையை எடுக்க கீழ் இறங்கி கூடையில் சானியை அல்ல ஆரம்பித்தார். நான் வண்டியிலேயே அமர்ந்தபடி சுற்றி பார்த்தேன் .  இடுகாட்டில் கல்லரை மீது ஒரு உருவம் கண்கள் சிமிட்டிய படி அமர்ந்து இருந்தது . அந்த இருட்டிலும் கண்கள் நிலாவைப்போல் பளிச்சென்று இருந்தது. நான் பார்த்த பின்பு கண்கள் சிமிட்டாமல் என்னை உற்று பார்த்த படி அமர்ந்து இருந்தது. மாடும் கத்த ஆரம்பித்தது, நான் பயத்தில் தாத்தா என்று கத்தி வண்டியிலிருந்து கீழே விழுந்தேன். தாத்தாவையும் காணவில்லை மாட்டு வண்டியையும் காணவில்லை. கண்ணீருடன் கத்திக்கொண்டு ஒடினேன். ஆனால் ஒவ்வொரு அடி வைக்கும்போது அந்த உருவம்தான் என் அருகில் வந்துகொண்டிருந்தது. பயத்தில் கண்ணை மூடிக்கொண்டு கண்ணீருடன் ஓட ....
ஒரு கட்டத்தில் கண்ணை திறந்தேன் அந்த உருவம் கண் முன்னே இருந்தது. பயத்தில் உயிரே போகி விட்டது , நான் கண்ணை இருக்க மூடிக்கொண்டேன்.
 அந்த உருவம் என் கண்ணை தொட்ட பிறகு பூமி இரண்டாக பிளக்கும் சத்தம் நான் உணர்ந்தேன்.  நான் கத்திக்கொண்டே கீழே போக...

அந்த நிழல் கூரியது "நீ தான், நீயே தான் யாரிடமும் சொல்லாதே" .

நான் கத்தியபடி கண்ணை திறந்தால் ஆயா வீட்டில் திண்ணையில் படுத்திருந்தேன் .  மேலே பாம்பு , ஆயா அதை பார்த்து விட்டு டேய் தம்பி அது சாமி பாம்பு கத்தாதே என்று சாதாரணமாக  சொல்லிவிட்டு வரக்காப்பியை வைத்துச்சென்றார். ஆனால் ஆயா போன பிறகு அந்த பாம்பும் மறைந்தது.

படபடவென இருந்தது. 
காதில் நீ தான் என்று கேட்டுக்கொண்டிருந்தது , 
என்ன செய்வது தெரியாமல் ஓடி , ஆயா  மடியில்  போய் படுத்துக்கொண்டேன். பருப்பு புடைக்கும் சத்தம் கூட பயமாக இருந்தது. ஆயாவிடம் , தாத்தா எங்கே என்றேன். காட்டுக்கு குப்பை எடுக்க போயிருக்காருடா. அப்போ நானும் போனேனா? இல்ல இது கனவா? கருக் என்று இருந்தது. யாரிடமும் சொல்லாதே என்றும் சொல்லியது அந்த நிழல் . 

காதில் தொடங்கியது நீ தான் என்ற ஓலம். 

....தொடரும்...













Comments

Post a Comment

Popular posts from this blog

உருவமில்லா_நிழல் XI

பகுதி XI நம் வாழ்வின் தொடக்கம் இது. ஓலைச்சுவடி படித்தப் பின்பு சித்தர் : உனது பிரச்சனைக்கு தீர்வு கிடைத்தது. நீ தேர்ந்தெடுக்க பட்டவன் ராஜா... ராஜா : அந்த நிழல் உருவம் அழைத்தது  சித்தர் : உன்னை பித்து பிடிக்கச் செய்வதற்காக. சித்தர் : ஐயன் கூறியது. எனக்கு நிலை மேம்படவும் உனக்கு துவக்க நிலை தொடங்க இந்த நிகழ்வு. ராஜா: ஒன்றும் புரியவில்லை. சித்தர் : ஒவ்வொரு நிலை கடக்கும்பொழுது நிறம் மூலமாக எனக்கு அறிகுறி காமிப்பான் என் ஐயன். ராஜா : ஐயா .... ஒரே குழப்பம். சித்தர் : ராஜா... தெளிவாக கவனி நான் மெய்யியல் கோட்பாட்டை அடைய பயிற்சி செய்துவருகிறேன். நாம் பார்த்தது சிவனை அல்ல மெய்யியல் கோட்பாட்டில் முனைவர் நிலை அடைந்தவர். அந்த மஞ்சள் புடவை கட்டிய பெண்மனி வந்தது என் கடை நிலையின் துவக்கம் , அதாவது உச்சநிலை தொடங்க வழி . நீ கருப்புசாமி வணங்கக் காரணம் உன் துவக்க நிலை தொடங்கத்தான். கருப்பு  நீலம் பச்சை   சிகப்பு   மஞ்சள்   வெள்ளை இந்த ஆறு வண்ணங்கள்  தான் படிநிலைகளாக உள்ளன முன்னேறி உச்சநிலை அடையவும்.      மக்களுக்கு செம்மையாகவும் நன்னெறிகளைப் போதித்து  மக்கள...

இன்று முற்பது 🥺 நாளை ஒன்று😊

30ஆம் தேதி .. வேலையை முடித்து விட்டு வரும் பொழுது. ரீசார்ஜ் கடையில் ஐம்பது ருபாய்க்கு ரீசார்ஜ் அட்டையை வாங்கி அட்டயை சுரண்டும் போது , தொலைபேசியின் மணி அடித்தது... அட்டையை சட்டைப் பையில் வைத்தபடி  தொலைபேசியில்.... "துணைவியார் :  என்னங்க குழந்தைக்கு சர்லாக்ஸ் , அப்புறம் அரிசி, பருப்பும் தீந்துடுச்சு வாங்கிட்டுவாங்க." காசு கம்மியா இருக்கே. ஈசி பன்ன கார்டு வாங்கியாச்சே... ரீசார்ஜ் கடையில் மீண்டும் குடுக்க போகும்பொழுது   யோ போயா வெளிய கார்டை வேகமா சுரண்டுனா நம்பர் கிழிஞ்சுதான் போகும் அது உன் தப்பு போயா வெளிய... என்று கடையில் சத்தம் வந்தது. உள்ளே நுழைந்து . எப்படி கேட்பது , யோசித்தபடி கார்டை கொடுத்தேன்  கடைக்கார தம்பி : அண்ணா கார்டு சுரண்டியாச்சேணா... எப்படி வாங்குறது.. சரி தம்பி என்று   திரும்பி வரும்பொழுது  சாலை ஓரத்தில் தேங்கி நிற்கும் நீரை தாண்டி நடைபாதையில் காலடி வைத்து அண்ணாச்சி கடையில் வழக்கம்போல் பாதி பணமும் மீதி கடனுக்கும் மளிகை பொருள்  வாங்கிவிட்டு செல்லும் வழியில்   ஹோட்டலில் வாங்க அண்ணா வாங்க  "புரோட்டா தோசை குஸ்கா சிக்கன...

NPE / நான் பார்த்தேன் என்னை.