பகுதி10 ..
துளைப்பவன்
அவர் கூறியது : ராஜா , நான் துணையிருக்க சிக்கல்கள் பற்றி கவலை உனக்கு எதற்கு? என் கையில் கவலைகளை எல்லாம் கொடுத்துவிடு.
சித்தர் குரலில் "கண்களைத் திற" என்று கேட்டது.
கண் விழித்தால் மீண்டும் அதே இடத்தில் லிங்கத்தின் முன் இருந்தேன்.
ஐயா நாம் எங்குச் சென்றோம் . எப்படிச் சென்றோம்.ஒன்றும் புரியவில்லை
சித்தர் : அனைத்திலும் தேர்ச்சி பெற்ற சிவசித்தன். எங்களின் குரு. அனைத்து துரையிலும் தேர்ச்சி பெற்றவர். அவரைக்காண அவர் உலகிற்கு சென்றோம்.
“
அனி மாதி சித்திகளானவை கூறில்
அணுவில் அணுவின் பெருமையின் நேர்மை
இணுகாத வேகார் பரகாய மேவல்
அணுவத் தனையெங்குந் தானாத லென்றெட்டே
”
திருமூலரின் திருமந்திரம், 668வது பாடல்
//எண் பெருஞ் சித்திகளின் விளக்கம்
அணிமா - அணுவைப் போல் சிறிதான தேகத்தை அடைதல்.
மகிமா - மலையைப் போல் பெரிதாதல்.
இலகிமா - காற்றைப் போல் இலேசாய் இருத்தல்.
கரிமா - கனமாவது-மலைகளாலும், வாயுவினாலும் அசைக்க முடியாமல் பாரமாயிருத்தல்.
பிராப்தி - எல்லாப் பொருட்களையும் தன்வயப் படுத்துதல், மனத்தினால் நினைத்தவை யாவையும் அடைதல், அவற்றைப் பெறுதல்.
பிராகாமியம் - தன் உடலை விட்டு பிற உடலில் உட்புகுதல். (கூடு விட்டுக் கூடு பாய்தல்)
ஈசத்துவம் - நான்முகன் முதலான தேவர்களிடத்தும் தன் ஆணையைச் செலுத்தல்.
வசித்துவம் - அனைத்தையும் வசப்படுத்தல்.
இத்தகைய எண் பெருஞ் சித்திகளை எட்டு வகையான யோகாங்க பயிற்சியினால் சித்தர்கள் பெற்றனர்.//
அங்கு நாம் பார்த்தது , இந்த எட்டு சித்தங்களையும் தர்ச்சி பெற்றவர். உன் பிரச்சனைக்கு தீர்வு அந்த ஒலைச்சுவடியில் உள்ளது என்றார்.
நான் : அப்போ நான் பார்த்து ... சிவனா...சித்தரா...
சித்தர் : இல்லை எனது குரு , அவர் அறிவு அளப்பரியது . அதாவது ஒரு பிரபஞ்சத்தில் இறுதி என்று இருக்கும் என்றால் அந்த அளவு அவரது அறிவு. பின்னர் அவரது சக்தியைக் கண்டு சில சாமானியர்கள் வழிபட்டு இருக்கலாம். ஆனால் நான் வழிபடுவதற்கு காரணம் என் குரு . நான் அணிமா மகிமா இந்த இரண்டின் சித்தத்தை அடைய இத்தனை வருடங்கள் ஆகிற்று . தேர்ச்சி பெற்றேன் . அனைத்து துரைகளிலும் அவர் அறிவு என்பது எரிகல்லைப் போல
ஆகையால் அவருக்கு இந்த பூமியில் நான் எடுத்து பிறவியின் வெளிபாடே இந்த லிங்க வடிவம் எரிகல் போல பூமியில் இருந்த வந்து என்னை ஆசிர்வதிப்பார் என்று இந்த சிலையை நான் வழிவபடுகிறேன். நம் முன்னோர்கள் சித்தம் அடைய முயற்சி செய்தவர்கள் பல. இதெல்லாம் தானாக உனக்குப் புரிய வரும்.
நான் : ஆனால் புலித்தோல் அணிந்து இருந்தாரே ?
சித்தர் : உன் பிரச்சனைக்கு தீர்வு ஒலைச்சுவடியில் உள்ளது . முதலில் அதைப் பார்ப்போம் .
சித்தர் அந்த ஓலைச்சுவடியை படிக்கத் தொடங்கினார்...
...தொடரும்...
Comments
Post a Comment