பகுதி 9
அக்காவும் ஓலைச்சுவடியும்
வர டீ-யைக் குடித்துவிட்டு , கிணற்றில் குளிக்கப் போவதாக பொய் சொல்லி பேரமணர் மலை அடிவாரம் சென்றேன் சித்தரைக்காண..
ஊர் எல்லையில் கம்பிரமாக நம்மை காக்கும் கருப்பு சாமியையும், ஏழு கன்னிமார்களையும் கும்பிட்டுவிட்டு மலைமேல் நோக்கி சென்றேன்.தூரத்தில் ஒரு அக்கா மஞ்சள் சேலையோடு தலைமுழுதும் மல்லிகைப் பூ வைத்தபடி ஒரு கையில் கம்போடும் இன்னொருக் கையில் பழைய மூட்டை இருப்பதை பார்த்தேன் . ஆடு மேய்ப்பவர் என்று எண்ணினேன். இதற்கு முன்பு ஊர் ஏரிக்கரையில் பார்த்த ஞாபகம் . "இருட்டும் முன் நான் சித்தரை பார்த்து எனக்கு தீர்வுகாண வேண்டும் என்று" எனது எண்ணோட்டமாக இருந்தது. அதனால் ஓடினேன் அந்த அக்காவிடம் பேசத் தொடங்கினேன்.
நான் : அக்கா ,ஒர் உதவி உங்களுக்கு சாமியார் இருக்குமிடம் தெரியுமா..
அக்கா: சாமியாரா..?
நான் : இல்லை இல்லை சித்தர்..
அக்கா : சித்தரா.. இன்று பௌர்ணமி , அதனால் என்னப்பனை வழிபாடு செய்ய சென்றிருப்பார்.
நான் : புரியவில்லை அக்கா.
அக்கா : மலை மேலே லிங்கம் இருக்கும் , அங்கே போய் பார்.
நான் : அக்கா தனிமையில் செல்ல பயமாக உள்ளது , நீங்களும் என்னுடன் வாருங்கள் . அந்த மூட்டையை நான் எடுத்துக்கொள்கிறேன். என்றேன்.
அக்கா : நீ ஏன் சித்தரை பார்க்க துடிக்கிறாய்.
நான் : நடந்ததைக் கூறினேன்.
அக்கா : சிரித்த படி , சரி வா என்று லிங்கமிருக்கும் இடத்திற்கு அழைத்துச் சென்றார். .
போய் சித்தரைப்பார் என்றார் அந்த அக்கா. அத்துடன் அந்த அக்காவைக் காணவில்லை திரும்பினால் யாரும் இல்லை ,பாதி வழியில் அந்த மூட்டையை சுமந்தபடி நின்றேன். ஆச்சரியத்துடன் அங்கும் இங்கும் தேடினேன். ஒரு பெரியவர் வருவதை பார்த்தேன். அவரிடம் கேட்டேன் ...
நான் : ஐயா தாங்கள் ..
பெரியவர் : சித்தமெல்லாம் எனக்கு சிவமயமே..
நான் : சித்தரா நீங்கள்
பெரியவர் : நீ தேடியவன் நான் .நல்ல வேலை சரியாக தான் வந்தாய். பின்பு அந்த மூட்டையை பார்த்து அவள் எங்கே என்றார்..
நான் : அந்த அக்காவை காணவில்லை , உங்களைக் காண வழிகாட்டியாக இருந்தவர்.
சித்தர் : சரி வா... லிங்கேஸ்வரனைப் பார்ப்போம்
நான் : ஐயா , அந்த அக்கா யார்...
சித்தர் : தினமும் நீ பார்ப்பவள் தான், உன்னையும் ஊரையும் காக்கும் கருப்புசாமி கோயிலில் உள்ள கன்னிமார். சிவ பூஜைக்கு மலர் எடுத்து வருவாள் எனக்கு. இன்று நீ எடுத்து வந்திருக்கிறாய்..
நான் : மெய் சிலிர்த்தபடி... நின்றேன்.
சித்தர் : சரி வா ... இந்த மலை பல ரகசியமுடையது. இது உனக்கு இரண்டாவது முறை அல்லவா.
நான்: ஆமாம் ஐயா ... எனது நிழல் கூறியது. உண்மையா?
சித்தர் : முதலில் பூஜையை செய்தப் பிறகு உன் விஷயத்திற்கு வருவோம். பௌர்ணமி நாள், திங்கட்கிழமை, எல்லாம் நம் வசம் வரும் . மூட்டையை அவிழ்த்து பார்.
நான் :மூட்டையில் செண்பகப்பூ , வெள்ளெருக்கு மாலை , அரளிப்பூ , தாமரைப்பூ இருந்தது மற்றும் ஒரு ஓலைச்சுவடி.
லிங்கத்தை பூக்களால் அலங்கரித்து
பூஜையைத் தொடங்கினோம்...
......தொடரும்....
Comments
Post a Comment