பகுதி XI
நம் வாழ்வின் தொடக்கம் இது.
ஓலைச்சுவடி படித்தப் பின்பு
நீ தேர்ந்தெடுக்க பட்டவன் ராஜா...
ராஜா : அந்த நிழல் உருவம் அழைத்தது
சித்தர் : உன்னை பித்து பிடிக்கச் செய்வதற்காக.
சித்தர் : ஐயன் கூறியது. எனக்கு நிலை மேம்படவும் உனக்கு துவக்க நிலை தொடங்க இந்த நிகழ்வு.
ராஜா: ஒன்றும் புரியவில்லை.
சித்தர் : ஒவ்வொரு நிலை கடக்கும்பொழுது நிறம் மூலமாக எனக்கு அறிகுறி காமிப்பான் என் ஐயன்.
ராஜா : ஐயா .... ஒரே குழப்பம்.
சித்தர் : ராஜா... தெளிவாக கவனி
நான் மெய்யியல் கோட்பாட்டை அடைய பயிற்சி செய்துவருகிறேன். நாம் பார்த்தது சிவனை அல்ல மெய்யியல் கோட்பாட்டில் முனைவர் நிலை அடைந்தவர். அந்த மஞ்சள் புடவை கட்டிய பெண்மனி வந்தது என் கடை நிலையின் துவக்கம் , அதாவது உச்சநிலை தொடங்க வழி . நீ கருப்புசாமி வணங்கக் காரணம் உன் துவக்க நிலை தொடங்கத்தான்.
கருப்பு
நீலம்
பச்சை
சிகப்பு
மஞ்சள்
வெள்ளை
இந்த ஆறு வண்ணங்கள் தான் படிநிலைகளாக உள்ளன முன்னேறி உச்சநிலை அடையவும். மக்களுக்கு செம்மையாகவும் நன்னெறிகளைப் போதித்து மக்களை நல்வழி நடத்தவும் இருந்தார்கள் சித்தர்கள் . இன்னும் என்னைப்போல் பல சித்தர்கள் பயிற்சி நிலையில் உள்ளார்கள்.
உன்னை அழைத்து இங்கு வந்தது என் ஐயன் தான் .
ராஜா : ஐயா என் பிரச்சனைக்காக தீர்வைச் சொல்லுங்கள்.
சித்தர் : உன் பிரச்சனையா, இது நம் வாழ்வின் தொடக்கம் இது.
ஆசீவகம்
தொடரும்....
Comments
Post a Comment