டென்டே துணை
பகுதி3
8ஆம் வகுப்பு : பள்ளி நாட்களில் காலாண்டு முடிந்த பின்பு சுற்றுலா அழைத்துச் செல்வது வழக்கம். அந்த நாளும் வந்தது , பேரமணர் என்ற மலைமேல் இருக்கும் பூங்காடு என்ற ஊர் அருகே இரண்டு மைல்கள் தூரம் ட்ரக்கிங் செய்து உடல் அசதியுடன் அமர்ந்தோம். அங்கே நான் கண்ட காட்சி மாலை ஆறு மணி இருக்கும் "உருவம் இல்லை ஆனால் நிழல் இருந்தது". அசதியில் எனது மூலை எதையும் யோசிக்காதே என்று சொல்லியதோ என்னமோ நான் என் நண்பர்களுடன் பேசிய படி தூங்கிவிட்டேன் இரவு இரண்டு மணி இருக்கும் , சிறுநீர் கழிக்க டென்டை திறந்து வெளியே பார்த்தேன் . அங்கே கேம்ப் ஃபையர் ஏரிந்த படி இருக்க , அந்த மரப்பலகையில் மஞ்சள் பொடி தூவிய மாதிரி ஒரு உருவம். அதைப்பார்த்து , டென்டில் அமர்ந்த படியே மூச்சை கூட விடாமல் வாயை பொத்திக்கொண்டு டென்டை மூடிவிட்டேன். மாலையில் கண்ட காட்சி கண்ணில் வந்து போனது. அமைதியாக சிறுநீரை அடக்கிக் கொண்டு அமர்ந்தேன். டென்டின் மிக அருகிலே பலத்த மூச்சு வாங்கியபடி சத்தம் ஷ்ஷ்ஸ்ஷ் . அனைத்து பேய் கதைகளும் கண் முன்னே வந்தது , பயம் ஆரம்பிக்க தொடங்கியது. டென்டில்....
......தொடரும்......
முந்தைய கதை படிக்க
Comments
Post a Comment