பகுதி4
பேரமணர் மலை
டென்டில் இரவு அமர்ந்த படியே தூங்கிவிட்டேன்.சுமார் ஐந்து மணி அடக்க முடியாமல் வெளியே வந்தேன் , சுற்றியும் பணி. அருகிலே குட்டை , அதன் அருகில் சென்று சிறுநீரை கழித்து விட்டு திரும்பும் போது , ஒரு உருவம் தூரத்தில் துனி இல்லாமல் ,மெலிந்த உடல் , ஜடா முடி ... கண்ணைத்திறந்தால் டென்டில் இருந்தேன். காலையில் பயந்தபடி வாத்தியாரிடம் கூறினேன். அவர் சிரித்தபடி மடையா போய் எல்லாம் எடுத்து வை என்றார். ஆனால் என் மனதில் பயம் தெளிய வில்லை. அன்று மாலையே வீடு திரும்பினோம். அம்மாவிடம் அந்த நிகழ்வை சொன்னேன். அனைத்தையும் கேட்ட உடன் ,அது காட்டு வாசி இல்லைனா சாமியாரா இருக்கும். அதன்பின் சாமி தட்டில் இருந்த விபூதியை எடுத்து தலையில் தூவிய பின்பு , எதுவும் இல்ல நல்லா தூங்கு சரியாகி விடும்,
சாமி இருக்கு கவலைப்படாதே என்றார்.
அடுத்த நாள் பள்ளியில் , பூங்காடு ஊரில் இருக்கும் நண்பனிடம் இதைப்பற்றி கேட்டேன்.
ராஜா : டேய் , உங்க ஊர்ல இருக்க அந்த மலையில யாராச்சு இருக்காங்களா?
நண்பன்: நேத்து போனது அது மலை அடிவாரம் தான், சித்தர் ஆவியாக உலாவரங்கனு சொல்லுவாங்க
ரா: டேய் சித்தரா இல்ல ஆவியா.. ?
ந : மலை பேர் என்ன சொல்லு பாக்கலாம்.
ரா: பேரமணர் மலை.
ந: எனக்கே தெரியாதுடா , எங்க ஆயா கிட்ட கேட்டு சொல்லுரேன்
நாங்க பேச தொடங்கினோம் டென்டில் நடந்ததை...
... தொடரும்...
Awesome
ReplyDelete