கண்ணை மூடி எதைப்பற்றியும் யோசிக்காமல் இருக்கமுடியும் என்றால், நீங்கள் தான் வாழ்க்கையை வாழ்கிறீர்கள்.
ஏன் என்றால் நம் வாழ்க்கை முறையே அப்படி "நம்மை பிஸியாக வைத்திருக்கவேண்டும் " என்பதுதான்.
"படிப்பு > வேலை > கல்யாணம் > குழந்தை
அதன் பிரகு நமது
குழந்தையின் ப... வே.. க....
இதை அத்தனைக்கும் தேவை
பணம் ."
ஆமாம் அதற்காக அன்பு பாசம் அக்கறை அரவணைப்பு இல்லை என்று சொல்லவில்லை.
ஆனால் பகை , பொறாமை , போட்டி , ஏளனம் இவையும் உண்டு.
இந்த நான்கை சுற்றியே வாழ்க்கை மாறியது.இதில் எதோ ஒன்று இல்லை என்றாலோ தாமதம் ஆனாலோ அதுவும் பலவீனமான இதயம் என்றால் அவ்ளோதான்.
முடிச்சுட்டாய்ங்க போங்க ...
கண்ணைமூடினாலே இதே பிரச்சனை.
நம்மலே மறந்தாலும் சுற்றி இருப்பவர்கள் சொல்லும்போது மனது புண்படும்.
என்ன தான் பிரச்சனைனு பார்த்தா நாம் தான்.
ஏன் என்றால் நாம்
1.மற்றவரை சந்தோஷமாக வைக்கனும்,
2.அவர்களின் விருப்பத்திர்க்கு முக்கியத்துவம்
3.சுற்றி இருப்பவர்கள் என்ன நினைப்பார்கள்
4......... Commentil நீங்க சொல்லுங்க
இதை எதையும் யோசிக்காமல் இருந்தாலே வாழ்க்கை சுழற்ச்சி சரியாக செல்லும் மனச்சிக்கலில் மாட்டிக்கொள்ளாமல் இருக்கலாம்.
அதற்காக யாரையும் குறைச்சொல்வது தவறு. எண்ணம் தெளிவாக வைக்க வேண்டும். பக்குவமாக நடக்க தயார் படுத்துங்கள். உன்னை மதி , தனிமையை மதியுங்கள் , சுய ஒழுக்கம், புதிதாக எதை வேண்டுமானாலும் கற்று, மனதையும் மூலையையும் இளமையாக வைத்துக்கொல்லுங்கள்.
அனைத்திற்க்கும் பாஸ் (pause) செய்து வாழ்க்கையில் பாஸ் (pass) ஆகுங்கள்.
நானும் முயற்சிக்கிறேன்.
........Pause pass.... 🙏🏽🙏🏽🙏🏽
தொடர்கதைக்கு உருவமில்லாநிழல்
Nice
ReplyDeleteNice
ReplyDelete