30ஆம் தேதி .. வேலையை முடித்து விட்டு வரும் பொழுது. ரீசார்ஜ் கடையில் ஐம்பது ருபாய்க்கு ரீசார்ஜ் அட்டையை வாங்கி அட்டயை சுரண்டும் போது , தொலைபேசியின் மணி அடித்தது... அட்டையை சட்டைப் பையில் வைத்தபடி தொலைபேசியில்.... "துணைவியார் : என்னங்க குழந்தைக்கு சர்லாக்ஸ் , அப்புறம் அரிசி, பருப்பும் தீந்துடுச்சு வாங்கிட்டுவாங்க." காசு கம்மியா இருக்கே. ஈசி பன்ன கார்டு வாங்கியாச்சே... ரீசார்ஜ் கடையில் மீண்டும் குடுக்க போகும்பொழுது யோ போயா வெளிய கார்டை வேகமா சுரண்டுனா நம்பர் கிழிஞ்சுதான் போகும் அது உன் தப்பு போயா வெளிய... என்று கடையில் சத்தம் வந்தது. உள்ளே நுழைந்து . எப்படி கேட்பது , யோசித்தபடி கார்டை கொடுத்தேன் கடைக்கார தம்பி : அண்ணா கார்டு சுரண்டியாச்சேணா... எப்படி வாங்குறது.. சரி தம்பி என்று திரும்பி வரும்பொழுது சாலை ஓரத்தில் தேங்கி நிற்கும் நீரை தாண்டி நடைபாதையில் காலடி வைத்து அண்ணாச்சி கடையில் வழக்கம்போல் பாதி பணமும் மீதி கடனுக்கும் மளிகை பொருள் வாங்கிவிட்டு செல்லும் வழியில் ஹோட்டலில் வாங்க அண்ணா வாங்க "புரோட்டா தோசை குஸ்கா சிக்கன...
Comments
Post a Comment