Skip to main content

Posts

Showing posts from October, 2024

பல

 

சிலர்💔♥️

 

பிஸ்கட்

  தினமும் காலையில்  பிஸ்கட் போட்டு  கொஞ்சிவிட்டு நாளைத் தொடங்கும் என் தந்தை இன்று  இல்லை என்று அந்த வாலாட்டும் ஜீவனுக்கு  எப்படி புரியவைப்பது

பொழிந்திடும்

 ஐந்து ரூபாயில் தனது அன்பு மழையை ஆயுள்முழுக்கப் பொழிந்திடும். வாங்கியவன் அல்ல வழியில் கிடந்தவன். Don't buy it, adopt it.  ♥️

நத்தை குதிரை

 குதிரையை போல்  ஒடிக்கொண்டு இருந்தேன் பிரச்சனைகள் சிறுக சிறுக  சேர்த்து மூட்டைக்கட்டி  நத்தையைப் போல்    ஊர்ந்து பயணிக்கிறேன்... 

எண் எண்ணம்

 எண்களும் எண்ணங்களும்  தேய்வது வார்த்தைகள் மட்டுமல்ல வாழ்க்கையும் கூட தான். #life #pain #numbers #Motivation

ஒளி

 உன் கதிரால் நான் காதல் கொண்டு மலர்கிறேன். உன் ஒளியால் நான் பிரகாசிக்கிறேன். இருட்டில் இருந்து இழுத்துச் சென்றாய். #கடலோடியின்காதல் ♥️🌊 #love

ஐந்தாம் திசை

ஐந்தாம் திசை. நான் எல்லா மலைகளையும் ஏறிவிட்டேன்  நான் எல்லா கடல்களிலும் பயணம் செய்தேன் நான் எல்லா நாடுகளுக்கும் பறந்துவிட்டேன் ஆனால், என் திசைகாட்டி எப்போதும் காட்டியது,  இந்த நான்கு திசையையும் இல்லை வடக்கு கிழக்கு மேற்கு தெற்கு ஐந்தாவது திசை நீ. என் பயணமே உனக்காகதான்.♥️ © hmkpadi

கடல்

   கடலைப்போல்  உன் நினைவுகள் என்னுள் இருக்கின்றன, அதில்  மிதக்கின்றேன் என்றும் உன் நினைவுகளில்.

மனமில்லாமல்

 முடிவை  படிப்பதற்கு தைரியமில்லாமல புத்தகத்தை ஒளித்துவைக்கச் சொல்லிவிட்டேன் மனமில்லாமல் #வாசிப்பு #வார்த்தை  #வலி  #வாழ்க்கை  #reading #word #pain #life

பசியை மறந்தேன்

  ரொம்ப பசிக்குதேனு... மொபைலை சட்டைப்பையில் வைத்துவிட்டு ரையின் கோட் மாட்டிக்கொண்டு சாவியை எடுத்துட்டு மாடியில் இருந்து இறங்கிவந்து வண்டியை ஸ்டார்ட் செய்து, பங்க்-கிற்கு போய் 60ருபாய்க்கு பொட்ரோல் போட்டு ரெஸ்டாரன்ட்டுக்கு போய் 560ரூ.  பார்சல்-ஐ வாங்கிக்கொண்டு வீட்டுக்கு செல்லும் முன் டீசர்ட் போட்டுகிட்டு  வீட்டுக்கு பார்சல் டெலிவரி செய்துவிட்டு . வண்டியை டீக்கடையில் விட்டு  ஆத்தாம ஒரு டீ-யைக் குடித்ததும் பசியை மறந்தேன். பணியாற்றி பசியாற்றியவர்களுக்கு  நன்றி...

குருதி

 உலகமே என் காலடியில் இருக்கிறது என்றும், காற்றில் இறக்கையின்றி மிதக்கிறேன் என்றும் நினைத்திருந்தேன் கீழே விழுந்து  என் கண்களால்  என் குருதியை  பார்க்கும் வரை. பின்பு தான் புரிந்தது, பறக்கவில்லை  வீழ்கிறேன் என்று.🥺♥️ @hmkpadi

சிணுங்கி

 

நிம்மதி

இப்போதெல்லாம்  நிம்மதி என் எழுத்தில்  மட்டும் தான் உள்ளது. நிம்மதியைத் தேடி அலைந்து அலைந்து  நிம்மதியின்றி நிம்மதியை  இழந்தேன் இப்படிக்கு நிம்மதியில்லாதவன்.

காதல்மழையே

காதல் மழையே..   மழையாய் முத்தமிட்டு  காதல் கொடுத்தாய் இடியாய் இடித்துவிட்டு  காவு கொடுத்தாய் என் காதலை

மறதியில் துயில்கிறேன்

  இப்போதெல்லாம் தூங்கவேண்டும்  என்று  தூங்குவதில்லை மறந்துபோய்  தூங்கிவிடுகிறேன். தூங்கா_இரவுகள்

ஏமாறப்போவதில்லை

  அவள் வெட்கத்தில்  சிவந்ததை விட நீ சிவந்ததை  பார்த்து தான்  மிக சந்தோஷம்  ஏனென்றால் உன்னிடம் நான்  ஏமாறப்போவதில்லை.

படைத்தவனை படைத்தவன்

படைத்தவனை படைத்தவன் இயற்கையால் படைக்கப்பட்டவன்தான்.இதில் செயற்கையாக கதைக் கூறி படைத் திரட்டி பெரியவன் யார் என்று, நிகழ்த்தமுயன்று பாடையேறி நிழலாய் போனவர்களையே வரலாறு நமக்குப் பாடம் எடுக்கிறது. பாடத்தைக் கவனிக்காமல் மதியிழந்து, அறத்துடன் வாழ்வதையே ஆச்சரியமாக பார்த்து விட்டார்கள்.  எடுத்து காட்டு : குடும்பத் தலைவன் தனது குடும்ப நலனுக்காக உழைப்பதை ஆச்சரியமாகவும், அம்மா குழந்தைக்கு தாய்பால் கொடுப்பது  இயற்கையானதோ அறத்துடன் வாழ்வதும் இயற்கையானது.  ஒரு எறும்பு பிறந்து , வாழ்நாள் முழுதும் உழைத்து உண்டு இறந்த பின் எதுவும் நடப்பதில்லை. அந்த உயிர்க்கு எப்படி ஆவியாக மாறவோ , மறு ஜென்மோ ஒன்றில்லை. ஆனால் வாழும் முறை வேறு . தனிதன்மையால் வேறுபடுகிறோமே தவிர எல்லா உயிர்களும் சமம்.   மண்ணில் இருந்து வந்த எல்லா உயிர்களும் மண்ணிலே போகிறது. யோசிக்கலாம் எறும்புக்கு கல்விக் கடன் ,கல்யாணக் கடன்,மளிகைக் கடன், வண்டிக் கடன் ,வீட்டுக் கடன்,தவணைக் கடன் இதில் சிலருக்கு காலைக்கடனும் இன்று சிக்கலானது. ஆனால் பசியால் வரும் வலி எல்லா உயிர்களுக்கு ஒன்று தான். ●அன்பு அரவணைப்பு ஆசை மகிழ்ச்சி காமம் து...

மானுடமை

போர்

 என்னை தீவரவாதி ஆக்கிவிட்டாள், ஆனால் ஆயுதங்கள் அவளிடம். கண்களில் கன்னிவெடி உதட்டில் ஊசிவெடி  வெட்கத்தில் வெடிகுண்டு மொத்தத்தில் பலியின்றி  போர் தொடுத்தாள்  வெற்றியும் பெற்றாள் நான் சரணடைந்த பின்பு.♥️

வினாவிடை

 

வெங்காயம்

 என்னெல்லாம் சொல்றான் பாருங்க  வெங்காயமும் தனது  நெடியைக் குறைத்துவிட்டது  அவள் கண்களில்  கண்ணீரைப் பார்த்தவுடன். #வெங்காயம்

டோவ்

அம்மாவைப்போல்

 அம்மாவைப்போல்  மரத்தையும் மதிப்போம் வளர்ப்போம்.  பாலைவனத்திலன் இரவில் இருந்து நான்.

நாளை

 நம்பிக்கையாக  கடக்கின்றேன்  ஒவ்வொரு நாளும்  நாளை சரியாகிவிடும் என்று.

பச்சையை நோக்கி

 🟥 வறுமையின் நிறம் சிவப்பு  என்று  தெரியும் ஆனா ஷேர் மார்க்கெட்டை ஓப்பன் பன்னாதா தெரிஞ்சது சிவப்பு  அபாயம் கூட என்று. பச்சையை நோக்கிய பயணத்தில்.🟩

ஒன்றல்ல

 

100நாள்

 100நாள்  திட்டத்தில் இனைந்தோம் காட்டில் என் ஆயாவும் வீட்டில் நானும்  #பிக்பாஸ்

தயிர் பாக்கெட்

 பத்து ரூபாய்  தயிர் பாக்கெட்டில் பாதி உலகம் பசியாற்றியது.

நெகிழியைப்போல்

  பூமிக்குள் நெகிழியைப்போல் என்னுள் நீ இருக்கிறாய் என்றும் மக்காமல். ஆனால்  பூமியைவிட  எனக்கு  பாதிப்புக் குறைவுதான்

மூச்சை நிறுத்தி

 அடுப்பங்கரையில்  அனுதினமும் அவதிப்படும் அன்பான அழகான அம்மாவிற்கு தனது மூச்சை நிறுத்தி விடுமுறை விட்டது  எரிவாயு சிலிண்டர்.// சுட்டெரிக்கும் மனிதர்களிடம்  இருந்து எப்போது விடுமுறை என்று தெரியவில்லை

சோறு போடுமா...!

சோறு போடுமா....! மனிதன் சாப்பிட்ட மூக்காலங்கள்   தாத்தா: உயிர்வாழ // உழவு செய்ய. அப்பா: பசிக்காக // படிப்பற்காக. பேரன்: ருசிக்காகவும்//ரீசார்ஜ் செய்யவுமா? அப்பொழுது , எட்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். நெற்கதிரை(நெல்+கதிர்) கதிரடிக்க வாசலில் கட்டு கட்டாக மலை போல் குவித்து வைத்து இருந்தார்கள். நான் அதன் மேல் ஏறி என் அழகான ஊரையும் ஏரிக்கரையும் எருமை மாடுகளையும் பார்த்து ரசித்ததும்,  கையில் குச்சியுடன் மேலே நின்று ஊருக்கே நான் ராஜா போல் ஆனந்தமாக நின்றது ஞாபகம். அப்பொழுது என் தாத்தா கதிரடிக்க, ஆயா அதை தூற்றி  நெல்லைப் பிரித்தவுடன்.  அதை அனைத்தும் முத்து மணியைப்போல் பார்த்து பார்த்து மூட்டையில் அள்ளி எடுத்து வைத்தார்.  நான் : சிதரிய நெல்லை எடுத்து வந்து மூட்டையில் போட்டேன். தாத்தா : குச்சிய கீழ போடு , அதை நான் அள்ளிக்கிறன் நீ போய் விளையாடு . நான் : ஏன் தாத்தா நான் எடுக்க கூடாதா? தாத்தா : நீயும் உன் அப்பா மாதிரி நல்லா படிச்சு நல்ல வேலைக்கு போகனும். இதெல்லாம் என்னோடு போகட்டும்.           தொலைவில் புல்லட் சத்தம்  கேட்டவுடன...

ஆட்கள் தேவை

 ஆறுதல்  சொல்பவர்களுக்கு ஆறுதல்  சொல்ல  ஆட்கள்  இல்லை.

பார்க்கப்படாத வள்ளல்

 பத்து ரூபாயைவிட ஐந்து ரூபாய் பலகாரத்தை வாங்கும் பொழுது  அவள் கண்களில்  அதிக சந்தோஷம் நடைபாதையின்_தாய் உதவி செய்யும், பார்க்கப்படாத  வள்ளல்களுக்கு சம்ர்பணம்

பாடாய்படுத்துகிறது

 

மீனாய் மாற ஆசை

 

பேசாமல் பேசினார்

 ஆடியோக்கால் பேச முடியாதவர் வீடியோக்காலில்  ஆனந்தமாக  பேசிக்கொண்டு இருந்தார் சைகைகளால். கண்ணில் பார்த்து ஆனந்தமடைந்த பதிவு.

கத்தாமல்

 கத்திதீர்த்த வார்த்தைகளைவிட கத்தாமல்  உள்ளிருக்கும்  வார்த்தைகளுக்குதான்  வலி அதிகம்

100% தேர்ச்சி

 உலகமெனும் பள்ளியில், வாழ்க்கையே வாத்தியார், அனுபவங்களே பாடம். அதில் இறதி பரிட்சை மரணம். இதுவரை அனைவருமே பாஸ்.

எதார்த்தமானது

எதிர்கொள்ளவும் எதிர்பார்க்கவும் இல்லை வாழ்க்கை எதார்த்தமானது. Lifr i not abut fcimg and expecting, its about being in reality. ~hmk.

காலைக்கடன்😵‍💫

  கல்விக் கடன் கல்யாணக் கடன் மளிகைக் கடன் வண்டிக் கடன்  வீட்டுக் கடன் தவணைக் கடன் இவை அனைத்தையும் விட  சிக்கலானது காலைக்கடன் தான்

மூணுமணிமூளை

  அதிகாலை 3 மணிக்கு -(3மணி_மூளை) மூளை: இப்ப மட்டும் ஒரு கோடி கிடச்சா என்ன பன்னுவ மனம்: ●ஃபர்ஸ்ட்டு எல்லா கடன் அடச்சிட்டு ●40 லட்சத்துக்கு வீடு ●30 லட்சத்துக்கு FD ●மீதிக்கு ஒரு நல்ல பிஸ்னஸ் டீ கடை இல்லனா  பிரியாணி கடை ஸ்டார்ட் பன்னனும் ●ஒருவேல ரைய்டு வந்துட்டா, டேக்ஸ்  ஒலுங்கா கட்டிடனும் க்ர்ர்ர் க்ர்ர்ர......