படைத்தவனை படைத்தவன் இயற்கையால் படைக்கப்பட்டவன்தான்.இதில் செயற்கையாக கதைக் கூறி படைத் திரட்டி பெரியவன் யார் என்று, நிகழ்த்தமுயன்று பாடையேறி நிழலாய் போனவர்களையே வரலாறு நமக்குப் பாடம் எடுக்கிறது. பாடத்தைக் கவனிக்காமல் மதியிழந்து, அறத்துடன் வாழ்வதையே ஆச்சரியமாக பார்த்து விட்டார்கள்.
எடுத்து காட்டு : குடும்பத் தலைவன் தனது குடும்ப நலனுக்காக உழைப்பதை ஆச்சரியமாகவும், அம்மா குழந்தைக்கு தாய்பால் கொடுப்பது இயற்கையானதோ அறத்துடன் வாழ்வதும் இயற்கையானது.
ஒரு எறும்பு பிறந்து , வாழ்நாள் முழுதும் உழைத்து உண்டு இறந்த பின் எதுவும் நடப்பதில்லை. அந்த உயிர்க்கு எப்படி ஆவியாக மாறவோ , மறு ஜென்மோ ஒன்றில்லை. ஆனால் வாழும் முறை வேறு . தனிதன்மையால் வேறுபடுகிறோமே தவிர எல்லா உயிர்களும் சமம்.
மண்ணில் இருந்து வந்த எல்லா உயிர்களும் மண்ணிலே போகிறது.
யோசிக்கலாம்
எறும்புக்கு
கல்விக் கடன் ,கல்யாணக் கடன்,மளிகைக் கடன், வண்டிக் கடன் ,வீட்டுக் கடன்,தவணைக் கடன் இதில் சிலருக்கு காலைக்கடனும் இன்று சிக்கலானது.
ஆனால் பசியால் வரும் வலி எல்லா உயிர்களுக்கு ஒன்று தான்.
●அன்பு அரவணைப்பு ஆசை மகிழ்ச்சி காமம் துன்பம் இவை அனைத்தும் உணர்ந்தும்.
●நல்லப் போட்டியால் பொறாமைக்கொண்டு வளர்ந்தும்.
●கெட்ட எண்ணத்தை மறந்தும்.
சாகும்வரை வாழ்வோம் நலமுடன்.
தீர்வு : இல்லை. கற்பனைக் கதையைக் கேட்டு , விஷத்தை உண்டு, விடைபெறுவோம். ஆவியாக மாறுவோமா என்று தெரிந்துவிடும்.
-hmkpadi
Nice thoughts
ReplyDelete