எனக்கு பிடித்த
ஆயா தாத்தாவை
இன்று கரையானுக்கு பிடித்தது
உங்கள் வாழ்வியலுக்கு
நிகராக ஒன்று எதுவுமில்லை
"தற்சார்பு வாழ்க்கை"
ஊருக்கு வந்தாலே ,
ஆயாவின்
பின் கொசவம் வைத்து சேலை
நாட்டுக்கோழி முட்டை அவிச்சு தருவது
முடிவில்லா பாசத்தையம்
கோபத்தில் அக்கறையும்
தாளித்தபருப்பு அமிர்தமாகவும்
தாத்தாவின்
விடியற்காலை வர டீயும் , சந்தையின் முறுக்கும்
பனை மரத்தில் மேஜிக் - நுங்கு , பனம்பழம் சுட்டு ஆரவைத்து சூப்பியது , பனங்கொட்டை கிழங்கு (நடுவில் வெள்ளையாக இருக்கும்) ,பனம்பால் (தெளுவு)
நுங்கு வண்டி அதில் உஜாலா பாட்டில் நடுவே
வயல் நண்டு , ஏரி மீன் மற்றும் நீச்சலடித்த கிணறு
தாத்தாவின் சைக்களில் குரங்கு பெடல்
அனைத்தும் இனி இங்கு எனக்கு இல்லையே....
நான் எங்கு போவேன் இனி...
ஆயா தாத்தா.
For more
Comments
Post a Comment