PERANBU 2018
இந்த படத்தை வாழ்நாளில் பார்க்கவே கூடாது என்று இருந்தேன் .ஆனால் என்னவோ திடீர் திருப்பம்
"பேரன்பு" ராம் அவர்களின்
படைப்பை பார்த்து விட்டேன் .
புணர்தலின் புனிதமும் வலியும் ,
இயலாமையின் உச்சமும்.
சில காட்சி கண்ணில் நெருப்பாய் எரிந்தது
• தண்ணீர் குடத்தில் கையை விட்டு கீழே விழுந்த பாப்பா.
• பவுடர் பூசிய முகம். ( அழகாக தெரியவும் , ஜன்னலில் இருந்து உலகத்தை பார்ப்பதும்)
• பேடை தானாக வைக்க முயற்சி செய்வது.
• டீவியில் ஹீரோவுக்கு முத்தம் கொடுத்தது.
என பல காட்சி.
தந்தையாக அமுதவனின்
• வயதுக்கு வந்த பிறகு தலையில் கைவைத்த போது
• வீட்டை விட்டு வரும்பொழுது அந்த அழகான குழந்தையை பார்ப்பது
•பேடை தானே வைக்க போவதும் , பின்பு பாப்பா தடுத்த போதும்
•என் பொண்ணுக்கு கை கால் வர்ல ஆனா ஆசை இருக்கு .
இன்னும் பல காட்சி
ஹோமில் தவித்த பாப்பா,
பாடல்வரிகளால் இல்லை
முழுதும் வலிகளால் நிறைந்தது
"இயற்கையின் தீர்ப்பில்
நானே குற்றவாளியா
அதை திருத்தி எழுத
தானே யாருமில்லையா
செத்து போச்சு மனசு...
செத்து போச்சு மனசு...
என்ன போல ஜீவன் எல்லாம்
ஒதுங்கி கொள்ள இடமும் இல்லை
உன்ன விட வாழ்வில் இங்கு
எனக்குன்னு யாரும் இல்லை"
ஆனந்தமான காட்சியைப்பற்றி எதையும் கூற ஆசையில்லை
மீரா உடலால் பலமுறை காமம் கொண்டாலும் அந்த ஆட்டோவில் அமுதவனுடன் வரும்போது அந்த முகம் கூரியது மனதால் காதல் வெட்கம் எப்படி இருக்கும் என்று.
அமுதவனுக்கும் பாப்பாவிற்கும் மீரா கிடைத்தாள்.
ஆனால் மீரா இல்லாத எத்தனையோ பாப்பாக்கள் இருக்கின்றன...
என் எண்ணோட்டம்
நான் படத்தை பார்த்தப் பிறகு எனக்கு ஒரு ஆயிரம் புத்தகத்தைப் படித்த மாதிரி இருந்தது.
இந்தப் படம் எனக்கு வாழ்க்கைப் பாடம்.
பொறுமை
ஒழுக்கம்
கடமை//
அன்பு
அரவணைப்பு
ஆதரவு.
இன்னும் பல பாடங்கள் அது எனக்கு மட்டும் போதும்.
இயக்குநர் ராம் கண்களால் பார்க்கும் பார்வை அழகான எதார்த்தமான உண்மையான பார்வை.
Nice
ReplyDelete