Skip to main content

சர்கஸில் நான்👍

தூரத்திலிருந்து ஒலிப்பெருக்கியின் சத்தம். காது கொடுத்துக் கேட்டேன் சர்கஸைப் பற்றி விளம்பரம் வாசித்ததைக் கேட்டவுடன் எனது பழைய நினைவுக்குச் சென்று விட்டேன். ஏன் என்றால்,  கடைசியாக நான்  எனது 12 வயதில் என் அப்பா அம்மாவுடன் சென்றது ஞாபகம். சர்கஸ்க்கும் மற்றும் அருகே உள்ள  எக்ஸிபிஷனுக்கும் போனோம்.

டவுனில்
முதல்முறை சர்கஸில் நான்
உள்ளே நுழையும்போதே கோமாளி , ஒட்டகம் , யானை இதைப் பார்த்தும் ஆர்வம் அதிகமானது . சிங்கத்தின் கர்ஜனை ,  கிளி சைக்கிள் ஓட்டியது, புஸ் புஸ் நாய் இரண்டு கால்களில் நடந்தது, யானை பந்து விளையாடியதைப் பார்த்து பூரித்தேன். சைக்கிளிலும் , ஓடும் குதிரை மேல் ஏரி நின்று விளையாடிய கோமாளிகள். வாயை பிளந்த படி மேலே பார்த்தால் கயிற்றில் கோமாளிகள் உயிரை பணயம் வைத்து அங்கும் இங்கும் ஊஞ்சலாடினார்கள். பார்த்த எனக்கே உயிர் ஊஞ்சலாடியது. இன்னும் பல இருந்தன.

எக்ஸிபிஷனில்
கூட்டத்தில் சோப்பு நீரில் முட்டை விடுவது, டெல்லி அப்பளம்,  , ஊஞ்சல் , ஜெயன்ட் ராட்டினம் , ஒரு பெண் தலை ஆனால் உடம்பு மலை பாம்பைப்போல் இருந்ததைப் பார்த்து ஒரே ஆச்சரியம் ,  மற்றும் பல விளையாட்டுகளும் ,கடைகளும் இருந்தன. 

கிராமத்தில்
இருபது வருடம் கழித்து  

தூரத்திலிருந்து ஒளிபெருக்கியில் சர்கஸ் விளம்பரம் கேட்டேன் . இந்த குக்கிராமத்தை நம்பி சர்கஸ் போட்டவர்களை பார்க்க ஆசை. யார் வரப்போராங்க  என்றுதான் என் எண்ணம். நான் கண்டிப்பா போக வேண்டும் என்று நினைத்தேன். அத்தை வீட்டிலிருந்து தடுக்கி விழும் தூரம்தான் சர்கஸ் இருந்தது. சர்கஸின் முதல்நாள் மாலை ஆறு மணி நான் என் மனைவியை அழைத்தச் சென்றிருந்தேன். சர்கஸ் பின்புரம் தான்  கண்களுக்கு முதலில் பட்டன . பின்புறத்தில் சில டென்ட்டுகளும் , துணி மூட்டைகள் மற்றும் சிறுமிகள் ஓடி விளையாடிக் கொண்டிருந்தனர்.
டிக்கெட் கவண்டரில் , அவர்களது விசிடிங் கார்டின் பின்னால் வரிசையாக நம்பர் எழுதியபடி இருந்தது. 50ரூபாய் ஒரு டிக்கெட், இரண்டு கார்டு அதாவது டிக்கெட்டுகளை வாங்கிக்கொண்டு  நுழைவில் பார்த்தால் இரண்டு அடியில் ஒரு பெண் சிறுமி  டிக்கெட்டை வாங்கிக்கொண்டு உள்ளே அனுப்பிவைத்தார். 

டிக்கெட் தனியாக ப்ரிண்ட் செய்ய கூட வசதி இல்லை. சிறிய சர்கஸ் ஆனால் வயிற்றுக்காக நாடோடிகள் போல ஊர் ஊராய் சுற்றும் மனிதர்கள்.  மற்றும் ஐம்பது ரூபாயிக்கு ஏற்றபடி நானும் ஆர்வமாக இருந்தேன். அங்கே இரு குழந்தைகள் இங்கும் அங்கும் ஓடியபடி , மற்றும் ஒரு சிரிய குதிரை இதை பார்த்த படி இருக்கையில் அமர்ந்தோம். 

நம் வாழ்க்கைக்கு வண்ணங்கள் கூடுதல் உயிர் தருகிறது.
வறுமையின் நிறம் அந்த சேலைச் சுவற்றில் கண்டேன்.ஏன் என்றால் அங்கே காலியாக இருந்தது அவர்கள் வயிறு மட்டுமல்ல இருக்கைகளும் தான். சில பாடல்கள் , விளம்பரம் முடிந்த பிறகு கிராமத்தில் இந்த சர்கஸ் புதிதே சிறுவர்கள் சிலர்  வந்த பின்பு ஆரம்பித்தது.
ஒவ்வொரு  பாடல்கள் முடிந்த பின்பு முதல் விசில் கைதட்டலும் ஆரம்பித்து வைத்தேன் பின்பு சிறுவர்கள் பிடித்துக்கொண்டனர்.

சிறுமி ஜிம்னாஸ்டிக் செய்த போது,ஆச்சரியமும் பிரம்மிப்புமடைந்தேன் அந்த பிஞ்சு விரல்களைப் பார்த்து.

வயிற்றுப்பசிக்காக டிக்கெட்டும் ,
அவர்களது திறமை வளர்ச்சிக்காக கைத்தட்டலும் .
என்னிடமிருந்து.... நான் தந்தது...

அப்பாவுடன் செல்லும்போது இந்த அனுபவம் இல்லை. மற்றும் அங்கு சிறுமிகள்  இல்லை , அது  ஜம்போ சர்கஸ் எல்லா கலைஞர்களும் பயிற்சிப்பெற்று இருப்பார்கள். இதுவோ 10  பேருடன் சில சிறுமிகள் மற்றும் குட்டிக் குதிரை. 

ஆதலால் ஆதரிப்பீர் . 
தானம் தர்மம் 
எனக் கருதாமல் 
ஊக்கப்படுத்துதல் 
என எண்ணி , 
கண்டு மகிழுங்கள்.



முக்கியமான நிகழ்வு 
அருகில் மாடி மேலே இருந்து சில முட்டாள்கள் ஜுஸ் பாட்டில் எரிந்தனர் முற்றிலும் முட்டாள்களின் செயல் . பள்ளி மாணவர்கள் சுமார் எட்டாம் வகுப்பு இருக்கும். பெற்றோர்கள் நல்லதைச்சொல்லி வளர்க்கனும் // விளையாட்டு வினையாகும்... மேடையின் மேல் குறி வைத்தது பார்வையாளர் மீது அதுவும் சிறுமியின் அருகில் விழுந்தது, அந்தச் சிறுமியின் தந்தை துடித்ததை பார்த்து எனது தந்தை ஞாபகம் வந்தது. ஏன் என்றால் எனது தந்தை இப்பொழுது என் ஞாபகத்தில் மட்டும் தான் இருக்கிறார். பெற்றோர்கள் இருக்கும் பொழுதே பெருமை சேர்க்காவிட்டலும் சரி ஆனால் சந்தோசமாக வைத்துக்கொள்ளுங்கள்.

பிள்ளைகளை
முட்டாள்களாக வளர்க்காதீர் ,
சந்தோசமாக வைத்திருங்கள்
பெற்றோர்களை.

நன்றி 

...சர்கஸ் முடிவடைந்தன...


மேலும்  என் எழுத்தைப் படிக்க
கீழே க்ளிக் செய்யுங்கள்










Comments

Post a Comment

Popular posts from this blog

உருவமில்லா_நிழல் II

Part-2 சாமியும் ஆவியும்  //  மேகியும் மைலோவும்   ஏழாம் வகுப்பு  மனதளவில் தனிகுடித்தனம் ஏரிய நாட்கள். அதே பள்ளி, கிளை மாற்றம் , பழைய நண்பர்கள் யாரும் இல்லை. முக்கியமான வகுப்பு , ஏன் என்றால் நான் பயம் என்ற உணர்வை அதிகமாக உணர்ந்தேன். பள்ளி அருகில் இடுகாடு/கல்லறை மற்றும் அங்கே செல்லக்கூடாது என்பதர்காக கதைகள் ஆயிரம். பாவம் அந்த பிஞ்சு நெஞ்சம் அனைத்தையும் நம்பின. ஆறாம் வகுப்பு வரைக்கும் நான் படித்த பள்ளியில்  கோவில் பின்புறம் திருமணிமுத்தாறு  மற்றும் வகுப்பறை ஜன்னலில் இருந்து வரும் கைத்தறி நெசவாளர்களின்,  கடக் கடக்  கடக் கடக் என்று அந்த ஆனந்த ஒலி. அதைக் கேட்கும் பொழுது நான் ரயிலில் செல்வது போல் இருக்கும். மற்றும் பள்ளி நேரங்களில்   ( Milo) மைலோ , மேகி (Maggi) , Colour paper( Art and craft ) ... என சில கம்பனி விளம்பரம் செய்கிறார்கள் என்று கூட தெரியாமல் ஆச்சரியத்துடன் வாயை திரந்தபடி பார்த்தோம் . வகுப்பு நேரங்களில் தான்  மேகி வேன் வந்தது. ஒரு கப் மேகியை முதல்முறையாக  சாப்பிடும்போது  சந்தோசமாக இருந்தது , அந்த அரை கப் தான்...

உருவமில்லா_நிழல் VI

பகுதி6 சொர்க்கம் சித்தர் ஒரு பக்கம் இருக்க . பள்ளியில் படிப்பது கொஞ்சம் மீதி நேரம்  மயில் இரகை குட்டி போடுவது,  பட்டாசு செடி எச்சை தொட்டு வெடிப்பது, பென்சில் குப்பையில் ரப்பர் செய்வது,  ஜீபூம்பா பென்சில் ,  ரேடியம் பாலை பையில் வைத்து பார்ப்பது,  சக்திமான் , மாயா மச்சிந்திரா மற்றும் கார்டுன் நெட்வ்னர்க் (இது மட்டும் இப்பொழுது வரை பார்ப்பேன்.) என பல இருந்தது ஐந்தாம் வகுப்பு வரை . ஆறாம் வகுப்பிலிருந்து தான்   Parle-G shaktiman sticker பீரோவில் , பரிட்சை அட்டையிலும் இருக்கும், கீழ் உள்ள கரம் போட்டு விளையாடுவது  ஏரோப்ளேன் ஐஸ்பாய் WWE cards .... , Gems மிட்டாய்க்கு WWE sticker. எட்டாம் வகுப்பின் போது பாட்டுபுத்தகம் , பென்ஃபைட் ,  புக் கிரிக்கெட், ஹேன்ட் கிரிக்கெட் மற்றும் பல... சொர்க்கத்தில் இருந்த நாட்கள். இவை அனைத்தும் என் மனதில் இருக்கும் அந்த  பயத்தை கொஞ்சம் ஆசுவாசப்படுத்தியது. சொர்க்கத்திலிருந்து வெளிய வந்தநாள் எட்டாம் வகுப்பு முழு ஆண்டு விடுமுறையில் , எனது ஆயா ஊருக்கு சென்றிருந்தேன். பூங்காடு அருகில் கடையூர் என்ற கிராம...

உருவமில்லா_நிழல் III

டென்டே துணை   பகுதி3  8ஆம் வகுப்பு : பள்ளி நாட்களில் காலாண்டு முடிந்த பின்பு சுற்றுலா அழைத்துச் செல்வது வழக்கம். அந்த நாளும் வந்தது , பேரமணர் என்ற மலைமேல் இருக்கும் பூங்காடு என்ற ஊர் அருகே இரண்டு மைல்கள் தூரம்  ட்ரக்கிங்  செய்து உடல் அசதியுடன் அமர்ந்தோம். அங்கே நான் கண்ட காட்சி மாலை ஆறு மணி இருக்கும் "உருவம் இல்லை ஆனால் நிழல் இருந்தது" . அசதியில் எனது மூலை எதையும் யோசிக்காதே என்று சொல்லியதோ என்னமோ நான் என் நண்பர்களுடன் பேசிய படி  தூங்கிவிட்டேன் இரவு இரண்டு மணி இருக்கும் , சிறுநீர் கழிக்க டென்டை திறந்து வெளியே பார்த்தேன் .  அங்கே கேம்ப் ஃபையர் ஏரிந்த படி இருக்க , அந்த மரப்பலகையில் மஞ்சள் பொடி தூவிய மாதிரி ஒரு உருவம். அதைப்பார்த்து , டென்டில் அமர்ந்த படியே மூச்சை கூட விடாமல் வாயை பொத்திக்கொண்டு டென்டை மூடிவிட்டேன். மாலையில் கண்ட காட்சி கண்ணில் வந்து போனது. அமைதியாக சிறுநீரை அடக்கிக் கொண்டு அமர்ந்தேன். டென்டின் மிக அருகிலே பலத்த மூச்சு வாங்கியபடி சத்தம்   ஷ்ஷ்ஸ்ஷ் . அனைத்து பேய் கதைகளும் கண் முன்னே வந்தது , பயம் ஆரம்பிக்க தொடங்கியது. டென...