Skip to main content

சர்கஸில் நான்👍

தூரத்திலிருந்து ஒலிப்பெருக்கியின் சத்தம். காது கொடுத்துக் கேட்டேன் சர்கஸைப் பற்றி விளம்பரம் வாசித்ததைக் கேட்டவுடன் எனது பழைய நினைவுக்குச் சென்று விட்டேன். ஏன் என்றால்,  கடைசியாக நான்  எனது 12 வயதில் என் அப்பா அம்மாவுடன் சென்றது ஞாபகம். சர்கஸ்க்கும் மற்றும் அருகே உள்ள  எக்ஸிபிஷனுக்கும் போனோம்.

டவுனில்
முதல்முறை சர்கஸில் நான்
உள்ளே நுழையும்போதே கோமாளி , ஒட்டகம் , யானை இதைப் பார்த்தும் ஆர்வம் அதிகமானது . சிங்கத்தின் கர்ஜனை ,  கிளி சைக்கிள் ஓட்டியது, புஸ் புஸ் நாய் இரண்டு கால்களில் நடந்தது, யானை பந்து விளையாடியதைப் பார்த்து பூரித்தேன். சைக்கிளிலும் , ஓடும் குதிரை மேல் ஏரி நின்று விளையாடிய கோமாளிகள். வாயை பிளந்த படி மேலே பார்த்தால் கயிற்றில் கோமாளிகள் உயிரை பணயம் வைத்து அங்கும் இங்கும் ஊஞ்சலாடினார்கள். பார்த்த எனக்கே உயிர் ஊஞ்சலாடியது. இன்னும் பல இருந்தன.

எக்ஸிபிஷனில்
கூட்டத்தில் சோப்பு நீரில் முட்டை விடுவது, டெல்லி அப்பளம்,  , ஊஞ்சல் , ஜெயன்ட் ராட்டினம் , ஒரு பெண் தலை ஆனால் உடம்பு மலை பாம்பைப்போல் இருந்ததைப் பார்த்து ஒரே ஆச்சரியம் ,  மற்றும் பல விளையாட்டுகளும் ,கடைகளும் இருந்தன. 

கிராமத்தில்
இருபது வருடம் கழித்து  

தூரத்திலிருந்து ஒளிபெருக்கியில் சர்கஸ் விளம்பரம் கேட்டேன் . இந்த குக்கிராமத்தை நம்பி சர்கஸ் போட்டவர்களை பார்க்க ஆசை. யார் வரப்போராங்க  என்றுதான் என் எண்ணம். நான் கண்டிப்பா போக வேண்டும் என்று நினைத்தேன். அத்தை வீட்டிலிருந்து தடுக்கி விழும் தூரம்தான் சர்கஸ் இருந்தது. சர்கஸின் முதல்நாள் மாலை ஆறு மணி நான் என் மனைவியை அழைத்தச் சென்றிருந்தேன். சர்கஸ் பின்புரம் தான்  கண்களுக்கு முதலில் பட்டன . பின்புறத்தில் சில டென்ட்டுகளும் , துணி மூட்டைகள் மற்றும் சிறுமிகள் ஓடி விளையாடிக் கொண்டிருந்தனர்.
டிக்கெட் கவண்டரில் , அவர்களது விசிடிங் கார்டின் பின்னால் வரிசையாக நம்பர் எழுதியபடி இருந்தது. 50ரூபாய் ஒரு டிக்கெட், இரண்டு கார்டு அதாவது டிக்கெட்டுகளை வாங்கிக்கொண்டு  நுழைவில் பார்த்தால் இரண்டு அடியில் ஒரு பெண் சிறுமி  டிக்கெட்டை வாங்கிக்கொண்டு உள்ளே அனுப்பிவைத்தார். 

டிக்கெட் தனியாக ப்ரிண்ட் செய்ய கூட வசதி இல்லை. சிறிய சர்கஸ் ஆனால் வயிற்றுக்காக நாடோடிகள் போல ஊர் ஊராய் சுற்றும் மனிதர்கள்.  மற்றும் ஐம்பது ரூபாயிக்கு ஏற்றபடி நானும் ஆர்வமாக இருந்தேன். அங்கே இரு குழந்தைகள் இங்கும் அங்கும் ஓடியபடி , மற்றும் ஒரு சிரிய குதிரை இதை பார்த்த படி இருக்கையில் அமர்ந்தோம். 

நம் வாழ்க்கைக்கு வண்ணங்கள் கூடுதல் உயிர் தருகிறது.
வறுமையின் நிறம் அந்த சேலைச் சுவற்றில் கண்டேன்.ஏன் என்றால் அங்கே காலியாக இருந்தது அவர்கள் வயிறு மட்டுமல்ல இருக்கைகளும் தான். சில பாடல்கள் , விளம்பரம் முடிந்த பிறகு கிராமத்தில் இந்த சர்கஸ் புதிதே சிறுவர்கள் சிலர்  வந்த பின்பு ஆரம்பித்தது.
ஒவ்வொரு  பாடல்கள் முடிந்த பின்பு முதல் விசில் கைதட்டலும் ஆரம்பித்து வைத்தேன் பின்பு சிறுவர்கள் பிடித்துக்கொண்டனர்.

சிறுமி ஜிம்னாஸ்டிக் செய்த போது,ஆச்சரியமும் பிரம்மிப்புமடைந்தேன் அந்த பிஞ்சு விரல்களைப் பார்த்து.

வயிற்றுப்பசிக்காக டிக்கெட்டும் ,
அவர்களது திறமை வளர்ச்சிக்காக கைத்தட்டலும் .
என்னிடமிருந்து.... நான் தந்தது...

அப்பாவுடன் செல்லும்போது இந்த அனுபவம் இல்லை. மற்றும் அங்கு சிறுமிகள்  இல்லை , அது  ஜம்போ சர்கஸ் எல்லா கலைஞர்களும் பயிற்சிப்பெற்று இருப்பார்கள். இதுவோ 10  பேருடன் சில சிறுமிகள் மற்றும் குட்டிக் குதிரை. 

ஆதலால் ஆதரிப்பீர் . 
தானம் தர்மம் 
எனக் கருதாமல் 
ஊக்கப்படுத்துதல் 
என எண்ணி , 
கண்டு மகிழுங்கள்.



முக்கியமான நிகழ்வு 
அருகில் மாடி மேலே இருந்து சில முட்டாள்கள் ஜுஸ் பாட்டில் எரிந்தனர் முற்றிலும் முட்டாள்களின் செயல் . பள்ளி மாணவர்கள் சுமார் எட்டாம் வகுப்பு இருக்கும். பெற்றோர்கள் நல்லதைச்சொல்லி வளர்க்கனும் // விளையாட்டு வினையாகும்... மேடையின் மேல் குறி வைத்தது பார்வையாளர் மீது அதுவும் சிறுமியின் அருகில் விழுந்தது, அந்தச் சிறுமியின் தந்தை துடித்ததை பார்த்து எனது தந்தை ஞாபகம் வந்தது. ஏன் என்றால் எனது தந்தை இப்பொழுது என் ஞாபகத்தில் மட்டும் தான் இருக்கிறார். பெற்றோர்கள் இருக்கும் பொழுதே பெருமை சேர்க்காவிட்டலும் சரி ஆனால் சந்தோசமாக வைத்துக்கொள்ளுங்கள்.

பிள்ளைகளை
முட்டாள்களாக வளர்க்காதீர் ,
சந்தோசமாக வைத்திருங்கள்
பெற்றோர்களை.

நன்றி 

...சர்கஸ் முடிவடைந்தன...


மேலும்  என் எழுத்தைப் படிக்க
கீழே க்ளிக் செய்யுங்கள்










Comments

Post a Comment

Popular posts from this blog

இன்று முற்பது 🥺 நாளை ஒன்று😊

30ஆம் தேதி .. வேலையை முடித்து விட்டு வரும் பொழுது. ரீசார்ஜ் கடையில் ஐம்பது ருபாய்க்கு ரீசார்ஜ் அட்டையை வாங்கி அட்டயை சுரண்டும் போது , தொலைபேசியின் மணி அடித்தது... அட்டையை சட்டைப் பையில் வைத்தபடி  தொலைபேசியில்.... "துணைவியார் :  என்னங்க குழந்தைக்கு சர்லாக்ஸ் , அப்புறம் அரிசி, பருப்பும் தீந்துடுச்சு வாங்கிட்டுவாங்க." காசு கம்மியா இருக்கே. ஈசி பன்ன கார்டு வாங்கியாச்சே... ரீசார்ஜ் கடையில் மீண்டும் குடுக்க போகும்பொழுது   யோ போயா வெளிய கார்டை வேகமா சுரண்டுனா நம்பர் கிழிஞ்சுதான் போகும் அது உன் தப்பு போயா வெளிய... என்று கடையில் சத்தம் வந்தது. உள்ளே நுழைந்து . எப்படி கேட்பது , யோசித்தபடி கார்டை கொடுத்தேன்  கடைக்கார தம்பி : அண்ணா கார்டு சுரண்டியாச்சேணா... எப்படி வாங்குறது.. சரி தம்பி என்று   திரும்பி வரும்பொழுது  சாலை ஓரத்தில் தேங்கி நிற்கும் நீரை தாண்டி நடைபாதையில் காலடி வைத்து அண்ணாச்சி கடையில் வழக்கம்போல் பாதி பணமும் மீதி கடனுக்கும் மளிகை பொருள்  வாங்கிவிட்டு செல்லும் வழியில்   ஹோட்டலில் வாங்க அண்ணா வாங்க  "புரோட்டா தோசை குஸ்கா சிக்கன...

சோறு போடுமா...!

சோறு போடுமா....! மனிதன் சாப்பிட்ட மூக்காலங்கள்   தாத்தா: உயிர்வாழ // உழவு செய்ய. அப்பா: பசிக்காக // படிப்பற்காக. பேரன்: ருசிக்காகவும்//ரீசார்ஜ் செய்யவுமா? அப்பொழுது , எட்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். நெற்கதிரை(நெல்+கதிர்) கதிரடிக்க வாசலில் கட்டு கட்டாக மலை போல் குவித்து வைத்து இருந்தார்கள். நான் அதன் மேல் ஏறி என் அழகான ஊரையும் ஏரிக்கரையும் எருமை மாடுகளையும் பார்த்து ரசித்ததும்,  கையில் குச்சியுடன் மேலே நின்று ஊருக்கே நான் ராஜா போல் ஆனந்தமாக நின்றது ஞாபகம். அப்பொழுது என் தாத்தா கதிரடிக்க, ஆயா அதை தூற்றி  நெல்லைப் பிரித்தவுடன்.  அதை அனைத்தும் முத்து மணியைப்போல் பார்த்து பார்த்து மூட்டையில் அள்ளி எடுத்து வைத்தார்.  நான் : சிதரிய நெல்லை எடுத்து வந்து மூட்டையில் போட்டேன். தாத்தா : குச்சிய கீழ போடு , அதை நான் அள்ளிக்கிறன் நீ போய் விளையாடு . நான் : ஏன் தாத்தா நான் எடுக்க கூடாதா? தாத்தா : நீயும் உன் அப்பா மாதிரி நல்லா படிச்சு நல்ல வேலைக்கு போகனும். இதெல்லாம் என்னோடு போகட்டும்.           தொலைவில் புல்லட் சத்தம்  கேட்டவுடன...

படைத்தவனை படைத்தவன்

படைத்தவனை படைத்தவன் இயற்கையால் படைக்கப்பட்டவன்தான்.இதில் செயற்கையாக கதைக் கூறி படைத் திரட்டி பெரியவன் யார் என்று, நிகழ்த்தமுயன்று பாடையேறி நிழலாய் போனவர்களையே வரலாறு நமக்குப் பாடம் எடுக்கிறது. பாடத்தைக் கவனிக்காமல் மதியிழந்து, அறத்துடன் வாழ்வதையே ஆச்சரியமாக பார்த்து விட்டார்கள்.  எடுத்து காட்டு : குடும்பத் தலைவன் தனது குடும்ப நலனுக்காக உழைப்பதை ஆச்சரியமாகவும், அம்மா குழந்தைக்கு தாய்பால் கொடுப்பது  இயற்கையானதோ அறத்துடன் வாழ்வதும் இயற்கையானது.  ஒரு எறும்பு பிறந்து , வாழ்நாள் முழுதும் உழைத்து உண்டு இறந்த பின் எதுவும் நடப்பதில்லை. அந்த உயிர்க்கு எப்படி ஆவியாக மாறவோ , மறு ஜென்மோ ஒன்றில்லை. ஆனால் வாழும் முறை வேறு . தனிதன்மையால் வேறுபடுகிறோமே தவிர எல்லா உயிர்களும் சமம்.   மண்ணில் இருந்து வந்த எல்லா உயிர்களும் மண்ணிலே போகிறது. யோசிக்கலாம் எறும்புக்கு கல்விக் கடன் ,கல்யாணக் கடன்,மளிகைக் கடன், வண்டிக் கடன் ,வீட்டுக் கடன்,தவணைக் கடன் இதில் சிலருக்கு காலைக்கடனும் இன்று சிக்கலானது. ஆனால் பசியால் வரும் வலி எல்லா உயிர்களுக்கு ஒன்று தான். ●அன்பு அரவணைப்பு ஆசை மகிழ்ச்சி காமம் து...