சாமியும் ஆவியும் // மேகியும் மைலோவும்
ஏழாம் வகுப்பு மனதளவில் தனிகுடித்தனம் ஏரிய நாட்கள். அதே பள்ளி, கிளை மாற்றம் , பழைய நண்பர்கள் யாரும் இல்லை. முக்கியமான வகுப்பு , ஏன் என்றால் நான் பயம் என்ற உணர்வை அதிகமாக உணர்ந்தேன். பள்ளி அருகில் இடுகாடு/கல்லறை மற்றும் அங்கே செல்லக்கூடாது என்பதர்காக கதைகள் ஆயிரம். பாவம் அந்த பிஞ்சு நெஞ்சம் அனைத்தையும் நம்பின. ஆறாம் வகுப்பு வரைக்கும் நான் படித்த பள்ளியில் கோவில் பின்புறம் திருமணிமுத்தாறு மற்றும் வகுப்பறை ஜன்னலில் இருந்து வரும் கைத்தறி நெசவாளர்களின், கடக் கடக் கடக் கடக் என்று அந்த ஆனந்த ஒலி. அதைக் கேட்கும் பொழுது நான் ரயிலில் செல்வது போல் இருக்கும். மற்றும் பள்ளி நேரங்களில் ( Milo) மைலோ , மேகி (Maggi) , Colour paper( Art and craft )... என சில கம்பனி விளம்பரம் செய்கிறார்கள் என்று கூட தெரியாமல் ஆச்சரியத்துடன் வாயை திரந்தபடி பார்த்தோம் . வகுப்பு நேரங்களில் தான் மேகி வேன் வந்தது. ஒரு கப் மேகியை முதல்முறையாக சாப்பிடும்போது சந்தோசமாக இருந்தது , அந்த அரை கப் தான் நாவில் சுவையை ஏற்றி மூலையில் சுவை பதிவானது.
அது ஒருபக்கம் இருக்க ...
பழையப்பள்ளியில் சாமி கண்ணை குத்திடும் என்றும்
இந்தப்பள்ளியில் ஆவி அடிச்சிடும் என்றும்
மனதில் பயம் பதிவாக தொடங்கியது.
.........தொடரும்...... for PART 1 Part3
Awesome
ReplyDelete♥️
Delete