பகுதி 9 அக்காவும் ஓலைச்சுவடியும் வர டீ-யைக் குடித்துவிட்டு , கிணற்றில் குளிக்கப் போவதாக பொய் சொல்லி பேரமணர் மலை அடிவாரம் சென்றேன் சித்தரைக்காண.. ஊர் எல்லையில் கம்பிரமாக நம்மை காக்கும் கருப்பு சாமியையும், ஏழு கன்னிமார்களையும் கும்பிட்டுவிட்டு மலைமேல் நோக்கி சென்றேன்.தூரத்தில் ஒரு அக்கா மஞ்சள் சேலையோடு தலைமுழுதும் மல்லிகைப் பூ வைத்தபடி ஒரு கையில் கம்போடும் இன்னொருக் கையில் பழைய மூட்டை இருப்பதை பார்த்தேன் . ஆடு மேய்ப்பவர் என்று எண்ணினேன். இதற்கு முன்பு ஊர் ஏரிக்கரையில் பார்த்த ஞாபகம் . "இருட்டும் முன் நான் சித்தரை பார்த்து எனக்கு தீர்வுகாண வேண்டும் என்று" எனது எண்ணோட்டமாக இருந்தது. அதனால் ஓடினேன் அந்த அக்காவிடம் பேசத் தொடங்கினேன். நான் : அக்கா ,ஒர் உதவி உங்களுக்கு சாமியார் இருக்குமிடம் தெரியுமா.. அக்கா: சாமியாரா..? நான் : இல்லை இல்லை சித்தர்.. அக்கா : சித்தரா.. இன்று பௌர்ணமி , அதனால் என்னப்பனை வழிபாடு செய்ய சென்றிருப்பார். நான் : புரியவில்லை அக்கா. அக்கா : மலை மேலே லிங்கம் இருக்கும் , அங்கே போய் பார். நான் : அக்கா தனிமையில் செல்ல பயமாக உள்ளது , நீ...