பகுதி7
அது கனவு இல்லை
பாட்டி மடியில் உறங்கிய நான் , மதியம் திண்ணையில் இருந்து எழுந்தேன். பயத்தில் காய்ச்சல் வந்து விட்டது. அப்போது தான் ஆயா சொன்னாங்க வடக்குப் பக்கம் தலையை வைத்து படுக்காத இப்படி தான் ஆகும் என்றார். எனக்கு திசையைப் பற்றி என்ன தெரியும் . இதற்கு முன்பு ஆயா வீட்டில் விளையாடும் போதே தூங்கி விடுவேன் அவர்களே போய் படுக்க வைத்தார்கள்.ஆனால் அன்று நானே தூங்கி விட்டேன் திசை அறியாமல். இனிமேல் அப்படி படுக்க கூடாது என்று சொல்லி மசூதியில் பாடம் போட்டு வாங்க என்று ஆயா கூற, சென்றேன் தாத்தாவுடன் சைக்கிளில்.
மசூதியில்
வெள்ளை உடை, தொப்பி , முருகன் வாகனம் மயில் இறகுடன் இருந்தார். மயிலிறகில் மேலிருந்து முட்டி வரை தடவி பாடம் போட்டார் .
கோவிலில்
வேஷ்டியுடன் பெரிய மீசை வைத்த பூசாரி கையில் விபூதி தலையிலும் வாயிலும் போட்டு பட்டையை போட்டார். தாயத்தும் கட்டினார்.
தாத்தாவிடம் கேட்டேன் அதிகாலை குப்பை அல்ல நான் வந்தேனா ? என்று.
தாத்தா : ஆமாம் வந்தாய் , மாட்டு வண்டியில் அமர்ந்து இருந்தாய் . நான் குப்பை அள்ள இறங்கினேன். பத்து கூடை அள்ளும்போதே உளரிய படி தூங்கிவிட்டாய். பின்பு உன்னை திண்ணையில் படுக்க வைத்தபிறகு நான் மறுபடியும் குப்பை அல்ல சென்றுவிட்டேன். அப்போ அது கனவு இல்லை.
பேசிக்கிட்டே பணியார கடை வந்தது . தாத்தா மூனு ரூபாய் கையில் கொடுத்து இந்தா வாங்கிட்டு வா என்றார்.
பணியார பாட்டி : பெரிய பொட்டு , முட்டைக்கண்ணு காசை கொடுத்து பயந்தபடி பணியாரம் கேட்டேன்.
நீதானா அது டவுனில் படிக்கும் பேரன் . குரல் பலமாக கேட்டபோது . அந்த கண்கள்
என்முன் வந்து போனது. வேகமாக பணியாரத்தை வாங்கிக்கொண்டு சைக்கிளில் ஏறினேன். தாயத்தை இருக்கி பிடித்துக்கொண்டேன்.
வீட்டில் :
கயித்துக்கட்டிலை தலைகீழாக போட்டு உட்கார்ந்து பணியாரத்தை தட்டில் வைத்து ஆயா எனக்கு ஊட்டியபடி வானத்தை பார்த்து கதை பேசி அந்த இரவு கழிந்தது. மீண்டும் அதிகாலை நீ தான்... என்று காதில் கேட்டது .
அந்த குரல் : நான் உன்னை எங்கெல்லாம் தேடினேன் தெரியுமா....
நான் : தாயத்தை பிடித்துக்கொண்டே பேச தொடங்கினேன்.. யார் நீ..
....தொடரும்....
Thrilling😳
ReplyDelete