Skip to main content

உருவமில்லாநிழல்VIII

பகுதி 8

நமக்கு நாமே.


நிழல் : அந்த குரலிடம் பேசாதே .

நான் : தாயத்தை இருக்கி கையில் பிடித்துக்கொண்டு உறக்கத்தில் இருந்தபடியே பேசினேன்.  நீ யாரு , நீ தானே அந்தக்குரல் . .

நிழல் : இல்லை இல்லை.நான் உன்னுடைய நிழல் தான். பேரமணர் மலையிலேயே நான் உன்னைப் பிரிந்துவிட்டேன்.

நான் : என்ன சொல்கிறாய் ...!  என் நிழல் என்னுடன் தான் இருக்கிறது . மாலை நான்  தெருவிளக்கின் அருகே விளையாடும் பொழுது இருந்ததே...

நிழல் : இல்லை,  இயற்கை வெளிச்சத்தில்  அதாவது சூரிய ஓளியில் அது அமைதியாகவும் நிலவொளியில் அது ஆக்ரோஷமாக இருக்கும். நான் உன்னை விட்டு வந்து வெகுநாள் ஆகிவிட்டது. பௌர்னமி அன்று மட்டும் தான் நான் நம்முள் வர வாய்ப்பு கிடைக்கும். ஆனால் கடைசி இரண்டு பௌர்னமி நம்மை சேரவிடாமல் தடுத்து விட்டது. 

நான் : எப்படி?

நிழல் : பௌர்னமி அன்று அந்த உருவமில்லா நிழல் உன் முன் தோன்றி , பயம் காட்டி உன்னை தூங்க விடாமல் செய்துவிடும். இன்றோ நீ தாயத்து இருக்கும் தைரியமோ தெரியவில்லை நீ தூங்கிவிட்டாய்.நானும் வந்துவிட்டேன். நாம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். இனி நமக்கு நாமே தான் பாதுகாப்பு.

நான் : அது சரி , நீ என்னுடை நிழல் , அப்போ அது யார் நிழல். அதுமட்டுமில்லாமல் என் நிழல் என்று சொல்கிறாய் எப்படி இவ்வளவு அறிவு உனக்கு?

நிழல்:  அது நிழல் இல்லை , உடலில்லா ஆவி அதாவது காத்துகருப்பு.  நீ சோர்ந்த நேரம்  அது நம்மை பிரித்தது .இதை எல்லாம் பேரமணர் சித்தர்  தான் கூறினார். உன்னை டென்டினில் உள்ள அனுப்பியவர். ஆனால் என்னை காப்பாற்றாமல் விட்டுவிட்டார். 

நாம் சிக்கியது எப்படி : அன்று ட்ரக்கிங் செய்த நாள் அமாவாசை , மாலை நீ கண்டது நிழல் போல் இருந்த காத்துக்கருப்பு தான். சிறுநீர் போக டென்டை திறந்து  பார்க்கும் போது,  நீ பார்த்தது மஞ்சள் உருவம் இல்லை, காத்துக்ருப்பு தனது காட்டேரித்தாய்க்கு   தீ சடங்கு நடத்தினான். அந்த தீயின் ஓளியால் அந்த காத்துக்கருப்பு மஞ்சள் உருவம் போல் உனக்கு தெரிந்தது.

நான் : காத்துகருப்பா...?!! பெருமூச்சை விடதொடங்கினேன் . நீ அப்போது எங்கு இருந்தாய்.

நிழல் : பூஜையே எனக்காக தான். அமாவாசை அன்று நிழலை பிடித்து தீ சடங்கு நடத்தி அவனது சக்தியை அதிகரித்துக்கொள்வான். போன பௌர்னமி அன்று அந்த சித்தரை நான்  சந்தித்தேன் . 

நிழல் : ஐயா , என்ன காரணம் , யார் இந்த காத்து கருப்பு.

சித்தர்முன்பொருகாலத்தில் , கொடிய எண்ணம் கொண்ட ராட்சசன் தீ சடங்கு செய்து காட்டேரித்தாயிடமிருந்து தீய சக்திகளை  பெற்றான் . அனைத்து மக்களை கொடுங்கோல் ஆட்சி செய்து கொண்டு  இருந்தான். அதை தாங்கிக்கொள்ள முடியாத அவனின் தாய் சாபமிட்டாள். 
                       "என் மகனுக்கு உடலில்லா உருவமில்லா சக்தியில்லா ஆவியாக அலைய வேண்டும் என்று"  சாபம் கேட்டாள்.
                               கடவுள் தோன்றி  ராட்சசன் சக்தி இல்லா ஆவியாக மாற்றினார்.  ஊர் மக்கள் இது தெரியாமல் ராட்சசனின் தாயை அடித்து விரட்டினர். அதைப் பார்த்து ஆவியாக இருந்த ராட்சசன் உங்கள் அனைவரையும் கொல்லாமல் விடமாட்டேன் என்று , கோபம் கொண்டான். மீண்டும் காட்டேரி தாயிடம் தவம் செய்து சாபம் நீங்க வழி கண்டான்.  
 " 1000 ஆடி அம்மாவாசை தவம் புரிந்து 1000 நிழலைக்கொண்டு என்னை தீ சடங்கில் அமரவைத்தால் நான் உன் சாபத்தை 1001ஆம் ஆடி அமாவாசையில்  நீக்குவேன் .

ஒரு  வருடம் உள்ளது அந்த சாபம் முடிய ...

நிழல் : சித்தர்  சொன்னபடி பார்த்தால் நான் தான் கடைசி நிழல்.

நான்:  பயத்தில்  கண்விழித்தவிட்டேன்  ,  சித்தரை பார்க்க அந்த மலைக்கு போலாமா... என்று நினைத்தன்.

தாத்தா : எந்திரிச்சிட்டயா போய் வரட்டீ குடி போ...

நான்: குழப்பத்தில் ... ஆட்டு கல்லில் அமர்ந்து டீயை வாங்கியபடி அமைதியாக அமர்ந்திருந்தேன்
          
...தொடரும்...

Part wise story click here 👇

part7 //  part6  //  part5  //  part4  //  part3  //  part2  // part1








Comments

Post a Comment

Popular posts from this blog

உருவமில்லா_நிழல் XI

பகுதி XI நம் வாழ்வின் தொடக்கம் இது. ஓலைச்சுவடி படித்தப் பின்பு சித்தர் : உனது பிரச்சனைக்கு தீர்வு கிடைத்தது. நீ தேர்ந்தெடுக்க பட்டவன் ராஜா... ராஜா : அந்த நிழல் உருவம் அழைத்தது  சித்தர் : உன்னை பித்து பிடிக்கச் செய்வதற்காக. சித்தர் : ஐயன் கூறியது. எனக்கு நிலை மேம்படவும் உனக்கு துவக்க நிலை தொடங்க இந்த நிகழ்வு. ராஜா: ஒன்றும் புரியவில்லை. சித்தர் : ஒவ்வொரு நிலை கடக்கும்பொழுது நிறம் மூலமாக எனக்கு அறிகுறி காமிப்பான் என் ஐயன். ராஜா : ஐயா .... ஒரே குழப்பம். சித்தர் : ராஜா... தெளிவாக கவனி நான் மெய்யியல் கோட்பாட்டை அடைய பயிற்சி செய்துவருகிறேன். நாம் பார்த்தது சிவனை அல்ல மெய்யியல் கோட்பாட்டில் முனைவர் நிலை அடைந்தவர். அந்த மஞ்சள் புடவை கட்டிய பெண்மனி வந்தது என் கடை நிலையின் துவக்கம் , அதாவது உச்சநிலை தொடங்க வழி . நீ கருப்புசாமி வணங்கக் காரணம் உன் துவக்க நிலை தொடங்கத்தான். கருப்பு  நீலம் பச்சை   சிகப்பு   மஞ்சள்   வெள்ளை இந்த ஆறு வண்ணங்கள்  தான் படிநிலைகளாக உள்ளன முன்னேறி உச்சநிலை அடையவும்.      மக்களுக்கு செம்மையாகவும் நன்னெறிகளைப் போதித்து  மக்கள...

இன்று முற்பது 🥺 நாளை ஒன்று😊

30ஆம் தேதி .. வேலையை முடித்து விட்டு வரும் பொழுது. ரீசார்ஜ் கடையில் ஐம்பது ருபாய்க்கு ரீசார்ஜ் அட்டையை வாங்கி அட்டயை சுரண்டும் போது , தொலைபேசியின் மணி அடித்தது... அட்டையை சட்டைப் பையில் வைத்தபடி  தொலைபேசியில்.... "துணைவியார் :  என்னங்க குழந்தைக்கு சர்லாக்ஸ் , அப்புறம் அரிசி, பருப்பும் தீந்துடுச்சு வாங்கிட்டுவாங்க." காசு கம்மியா இருக்கே. ஈசி பன்ன கார்டு வாங்கியாச்சே... ரீசார்ஜ் கடையில் மீண்டும் குடுக்க போகும்பொழுது   யோ போயா வெளிய கார்டை வேகமா சுரண்டுனா நம்பர் கிழிஞ்சுதான் போகும் அது உன் தப்பு போயா வெளிய... என்று கடையில் சத்தம் வந்தது. உள்ளே நுழைந்து . எப்படி கேட்பது , யோசித்தபடி கார்டை கொடுத்தேன்  கடைக்கார தம்பி : அண்ணா கார்டு சுரண்டியாச்சேணா... எப்படி வாங்குறது.. சரி தம்பி என்று   திரும்பி வரும்பொழுது  சாலை ஓரத்தில் தேங்கி நிற்கும் நீரை தாண்டி நடைபாதையில் காலடி வைத்து அண்ணாச்சி கடையில் வழக்கம்போல் பாதி பணமும் மீதி கடனுக்கும் மளிகை பொருள்  வாங்கிவிட்டு செல்லும் வழியில்   ஹோட்டலில் வாங்க அண்ணா வாங்க  "புரோட்டா தோசை குஸ்கா சிக்கன...

NPE / நான் பார்த்தேன் என்னை.